காத்தான்குடி
– கல்முனை பிரதான வீதியில் கோழிகளை ஏற்றிச்சென்ற வாகனமொன்று
விபத்துக்குள்ளானதில் வாகனத்திலிருந்த சுமார் 150 கோழிகள் இறந்துயுள்ளன.இநத் விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், கோழிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக வாகனமொன்று காத்தான்குடி நுழைவாயிலில் உள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
நீர்கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த சிறியரக வாகனமொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் கோழிகளை ஏற்றிச்சென்ற வாகன சாரதியும் மற்றுமொருவரும் சிறு காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தின் போது மின்கம்பத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply