காணாமல் போனோரின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றினால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முற்பகல் 9 மணிமுதல் 11 மணிவரை இடம்பெற்றது.
காணாமல் போனோரின் உறவினர்கள் பலரும் இந்தக் கவனயீர்ப்புப் ரோட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
“காணாமல்போனோர் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு விரைவுபடுத்தப்பட வேண்டும்”, “இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களையும் கவனயீர்ப்பில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்ததாக பிராந்திய செய்தியாளர் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்நிரகுமார் பொன்னம்பலம், கஜேந்நிரன் உட்பட வட மாகாண சபை உறுப்பினர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
இதேவேளை, இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு எதிராக மற்றொரு சாராரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு மற்றும் கைது செய்யப்பட்டு காணாமல்போன தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாரு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply