எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 5, 2014
மலேசிய விமானம் நடுவானில் எரிந்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக பரபரப்பு தகவல்
மலேசியாவில் இருந்து புறப்பட்டு மாயமான விமானம், நடுவானில் தீப்பிடித்து எரிந்து இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வந்த போதிலும், அதைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அவுஸ்திரேலியாவிலிருந்து, 4,500 கி.மீ., தொலைவில், இந்திய பெருங்கடலின் தென் பகுதியில், விமானம் ஒன்று கடலில் வீழ்ந்தது போன்ற சத்தம், கடலுக்கடியில் நிறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவி ஒன்றில் பதிவாகி இருப்பதாக, அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அதே சமயம், கேரளாவில் இருந்து தாய்லாந்திற்கு கடலில், சொகுசு படகில் பயணித்த, பிரிட்டனை சேர்ந்த கேதரின் என்ற பெண், ”செம்மஞ்சல் நிறத்தில் தீப்பிடித்த நிலையில், விமானம் ஒன்று கடலில் விழுந்ததை பார்த்தேன். அது விமானமாக இருக்கும் என முதலில் நினைக்கவில்லை. இப்போது அது, மாயமான மலேசிய விமானமாகத் தான் இருக்கும் என கருதுகிறேன்,” என தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எனினும் இந்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
நீண்ட காலமாக விவாதத்தில் இருந்து வரும் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...

No comments:
Post a Comment
Leave A Reply