blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, June 5, 2014

சீரற்ற வானிலையால், களுத்துறை மாவட்டத்தில் 167 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன

சீரற்ற வானிலையால், களுத்துறை மாவட்டத்தில் 167 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளனசீரற்ற வானிலை காரணமாக, இன்றைய தினமும் களுத்துறை மாவட்டத்தில் 167 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஹொரனை கல்வி வலயத்திலுள்ள 135 பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஏ சந்திராவதி குறிப்பிட்டார்.

வலயத்திலுள்ள 55 பாடசாலைகள் வெள்ளத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வெள்ளம் காரணமாக வீதிகள் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், ஏனைய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஹொரனை வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மத்துகம கல்வி வலயத்தில் 32 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

பாலிந்த நுவர கல்வி வலயத்தில் 16 பாடசாலைகளும், வலல்லாவிட்ட கல்வி வலயத்தில் 08 பாடசாலைகளும், மத்துகம கல்வி வலயத்தில் 8 பாடசாலைகளும், அகலவத்தையில் 3 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வெள்ளத்தினால் மூடப்பட்ட மத்துகம கல்வி வலயத்தின் 98 பாடசாலைகள் இன்று மீளவும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►