உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் உலக சுற்றுச்சூழல் தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
“தீவு நாடுகளும், காலநிலை மாற்றமும்” என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றுச் சூழல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரியில் இன்று விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply