blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, December 21, 2014

'அனைவரும் பாதுகாப்பான சூழலில் வாழ எல்லோரும் ஒன்று படுவோம்' - கல்முனையில் ஜனாதிபதி

நேற்று (20) காலை மஹிந்த ராஜபக்ச கல்முனைக்கு விஜயம் செய்தார். கனத்த மழையிலும் அம்மக்கள் ஜனாதிபதிக்கு பலத்த  வரவேற்பளித்தனர்.
கல்முனைக்குடி கடற்கரைப்பள்ளி திறந்த வெளியரங்கில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஏ எம். ரியாஸ் தலைமையில் இப்பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி எச் பியசேன கல்முனை மாநகர சபை உறுப்பினர் IP. ரஹுமான் கல்முனைக்குடி ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் DR. அஸீஸ் ஆகியோர்களும் கலந்துகொண்ட‌னர்.

வசதி படைத்த முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஹஜ் கடமையை நிறைவு செய்கின்றனர் . வறிய மக்களுக்கு அந்த வாய்ப்பு ஒரு தடவை கூட இல்லாமல் போகின்றது. 
ஆகவே இனி வரும் காலங்களில்  ஹஜ் கடமைக்குரிய காலத்தை விடவும்  மேலதிகமாக கடமை நிறைவேற்ற  செல்கின்ற தனவந்தர்கள்  ஏழைகள் இரண்டொருவரை  ஹஜ் கடமைக்கு கூட்டி செல்ல முன் வரவேண்டும் . என கல்முனையில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ  தெரிவித்தார் .

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கு  கல்முனை தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான  பெஷ்டர்  றியாஸ்  தலைமையில் கல்முனை கடற்கரைப் பள்ளி முன்பாக நடை பெற்றது . அங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்  அந்த  இருண்ட  30 வருட கால யுத்தத்தை என்னால் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது . தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு செல்ல முடியாதிருந்த அந்த யுகத்தை மாற்றி  இன்று நீங்கள் எல்லோரும் சுதந்திரமாக பள்ளிக்கு செல்கின்றீர்கள் . 
அன்று பள்ளிக்கு செல்ல நின்மதியில்லை ,பாடசாலைக்கு பிள்ளைகள் செல்ல முடியாது  அந்த இருண்ட யுகத்தை முறியடித்து  உங்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளேன் .

காத்தான்குடி பள்ளிவாசலில்  தொழுது கொண்டிருந்தவர்களை சுட்டுக் கொலை செய்ததை ஒரு நாளும் மறக்க  முடியாது . அந்த இருண்ட யுகத்தை நீக்கி சுதந்திரம் ,நின்மதியைப் பெற்று தந்தேன்.

கடந்த காலத்தில் இந்த பிரதேசத்துக்கு  பாரிய அபிவிருத்திக்கு பெருந் தொகை நிதி ஒதுக்கீடு செய்தேன் .ஏழை மக்களுக்கு பல வழிகளிலும்  நான் உதவி வழங்கினேன் .  
வரவு செலவு திட்டத்திலிருந்து  கற்பத்திலிருக்கும் பிள்ளை முதல் கபுறரை சென்றோர்  வரை  ஏதோ வகையில் உதவி செய்துள்ளேன். 65 வயது வயோதிபருக்கும் ,வலது குறைந்தோருக்கும்  பாரிய திட்டங்களை  முன்னெடுத்துள்ளேன் .

இந்த பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்  அரசுடன் இணைந்திருந்த காரணத்தினால் 480 பில்லியன் ரூபா நிதி   ஒதுக்கி  அபிவிருத்திகள் பல செய்யப் பட்டன . எந்த ஆதரவினையும் எதிர் பார்க்காமலே  மக்களுக்காக பெருந்தொகை நிதியை  ஒதுக்கினேன் . ஆனால் பொய் பிரச்சாரங்கள்  மேற்கொள்ளப் படுகின்றன .

இன வாதம்,மத வாதம் பேசி  நாட்டில் குழப்பம் விளைவிக்க  சிலர் முயற்சி செய்கின்றனர். இதனை மக்கள் நம்ப வேண்டாம் . 
மக்களுக்கு சுதந்திரம் அமைதியைப் பெற்றுக் கொடுத்ததற்காக  என்னை ஜெனிவாவுக்கு  கொண்டு போக சதி செய்கின்றனர். 
ஆனாலும் எனது நீதி நியாயமான  நடவடிக்கைக்காக  இஸ்லாமிய நேச நாடுகளே  எனக்கு ஆதரவாக  வாய் திறந்து குரல் எழுப்பியதை என்னால் மறக்க முடியாது .

எனவே அனைவரும் பாதுகாப்பான சூழலில் வாழ எல்லோரும் ஒன்று படுவோம்  என அவர் அங்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►