தலைமன்னார் பகுதியில் 10 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மன்னார் நீதவான் முன்னிலையில் நேற்று மாலை சந்தேகநபரான அதிபரை ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, சந்தேகநபரான அதிபர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கடுகாரன் குடியிருப்பு பிரதேச பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply