blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, December 13, 2014

தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை ஜனாதிபதி வேட்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்!

தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை ஜனாதிபதி  வேட்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்!இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு, ஊக்குவிப்பு, சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் கடப்பாடுகள் நிறைவேற்றல் ஆகியவற்றுக்கு பகிரங்கமான உறுதிமொழியை ஜனாதிபதி வேட்பாளர்கள் வழங்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- இலங்கையில் சகல மட்டங்களிலும் காணப்படும் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது முக்கியமானது.

எனினும் மனித உரிமைகள் நிலைவரத்தை சீர்செய்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இலங்கை எதிர்கொள்ளும் ஒரு பகுதி சவால் மாத்திரமே இதுவாகும்.

இலங்கையை தசாப்த காலமாக சீரழித்துள்ள மனித உரிமை மீறல்களுக்கும், துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுத்துள்ள தண்டணையிலிருந்து விடுவிக்கப்படும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், இன மத மற்றும் பால் ரீதியான பாகுபாடுகள் வன்முறைகளை முடிவுகாண்பதாகவும் உறுதி மொழி பகிரங்கமாக வழங்கப்படவேண்டும்.

முதல்கட்ட நடவடிக்கையாக வேட்பாளர்கள் அரசமைப்பின் 18 ஆவது திருத்தம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றை இரத்துச்செய்ய வேண்டும் எனவும் மன்னிப்புச்சபை கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►