blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, December 12, 2014

எஜமானியின் குழந்தையை அடித்து, மிதித்த பணிப்பெண்!!

எஜமானியின் குழந்தையை அடித்து, மிதித்த பணிப்பெண்தனது பராமரிப்பில் இருந்த ஒரு சிறிய பெண் குழந்தையை அடித்து, மிதித்த உகண்டாவின் பணிப்பெண் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவர், அந்தச் சிறுமியை தாக்கும் வீடியோ ஒன்று முன்னதாக வெளியானதையடுத்து இந்த தகவல்கள் வெளியே தெரியவந்தன.

அந்த குழந்தையின் தாய் தன்னை பல தடவைகள் இதே மாதிரி அடித்ததாலேயே, அந்த குழந்தையை தான் தாக்கியதாக அந்த பணிப்பெண் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

ஆனால், அதனை அந்த குழந்தையின் தாய் மறுத்திருந்தார்.

முன்னதாக சித்திரவதை குறித்த குற்றச்சாட்டு இவர் மீது சாட்டப்பட்டது. ஆனால், அது குறைக்கப்பட்டு பின்னர் தாக்குதல் குற்றச்சாட்டு மாத்திரம் சுமத்தப்பட்டது.

இவருக்கு வரும் திங்கட்கிழமை தண்டனை அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►