ஆளும் கட்சியில் அங்கம் வகித்த போதிலும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்குஆதரவளிப்பது என்பது தொடர்பில் தமது கட்சி இன்னமும் முடிவு செய்யவில்லை என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலர் ஹசன் அலி மீண்டும் கூறியுள்ளார்.
நாம் சிறுபான்மை மக்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சி என்றவகையில் பெரும்பான்மை கட்சிகளின் விருப்பத்துக்கு அடிபணிந்து செயல்பட முடியாது, அதனால்தான் ஆளும் கட்சியில் அங்கம் வகித்த போதிலும் இன்னும் முடிவெடுக்க வில்லை .
எனக்கு ஆளும் தரப்பு தந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்ற ஆதங்கத்தில் முடிவெடுக்காமல் இருக்கிறோம் , அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
அதேபோன்று வெளிவந்துள்ள இன்றைய அரசியல் மாற்றத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவசரப்பட்டு எமது முடிவை தெரிவிப்பதற்கு இல்லை , முதலாவது எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனம் எப்படி இருக்கப் போகிறது என்பது பற்றி பார்க்க வேண்டியிருக்கிறது, சிறுபான்மையினரின் பிரச்சினை தொடர்பில் குறிப்பாக இன பிரச்சினை தொடர்பில் அவரின் நிலைப்பாடு என்ன, அவர் முன்வைக்கும் தீர்வு என்ன என்பது பற்றி பார்க்க வேண்டியுள்ளது , அதை மையமாக வைத்துதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவை எடுக்கும் என தெரிவித்துள்ளார் .
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, November 22, 2014
பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி பார்க்க வேண்டியுள்ளது: முஸ்லிம் காங்கிரஸ்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நீண்ட காலமாக விவாதத்தில் இருந்து வரும் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...
-
பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டத்தில் பாம்பு விழுந்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டதையடு...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...

No comments:
Post a Comment
Leave A Reply