மஹிந்த அரசின் அமைச்சரவையில் பல முக்கிய மாற்றங்கள் அடுத்துவரும் ஓரிரு நாட்களில் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. முக்கியமாக பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பிரதமராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவை மாற்றத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலருக்கு முக்கிய பதவிகள் கிடைக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசநாயக்காவிற்கே சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்பட்டதாகவும் எனினும் அவர்பல தடவைகள் கட்சி மாறியுள்ளதை கருத்தில்கொண்டே அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு அப்பதவி வழங்கப்பட்டதாகவும்தெரிய வருகின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply