பாப்பரசர் பிரான்சிஸின் வருகையின்போது கொழும்பு பகுதியை சி.சி.ரீ.வி. கமெராக்கள் மூலம் கண்காணிக்கத் பொலிஸ் தலைமையகம் திட்டமிட்டு வருகிறது. வரும் ஜனவரி 13 ஆம் திகதி புனித பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கைக்கு வருகை தருகிறார்.
இதையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் செய்து வருகிறது என அதன் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.
நேற்றுக் காலை பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: ஏற்கனவே சி.சி.ரீவி. பாதுகாப்பு விசேட திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
90 லட்சம் ரூபா செலவில் தெமட்டகொட, ஒறுகொடவத்த, வெலிக்கட சிறைச்சாலைப் பகுதிகளில் கமெராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. அத்துடன் நாடாளுமன்றம், தாஜ் சமுத்ரா ஹோட்டல் மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளிலும் கமெரா கண்காணிப்பு உள்ளது.
எனினும் இந்தப் பகுதிகளின் கண்காணிப்பை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
பேஸ்லைன் வீதி, பேலிய கொட, ஒறுகொடவத்த, மற்றும் களனியா பாலம் ஆகிய பகுதிகளில் கமெராக்கள் பொருத்தப்படவுள்ளன.- என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply