blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, November 18, 2014

இராணுவக் குடும்பங்களுக்கு பல மில்லியன் பெறுமதியான நலன்புரி உதவிகள்!

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிரந்த நாள் மற்றும் இராண்டாம் ஆட்சிக்கால பூர்த்தி என்பவற்றின் நினைவாக கடந்த வெள்ளிக்கிழமை (நவ.14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விழாவின்போது யுத்த வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும், புத்தம் புதிய முச்சக்கர வண்டிகள், கல்வி உதவித் தொகை, வீடமைப்பு கடன்கள் என பல மில்லியன் பெறுமதியான நலன்புரி உதவிகள் வழங்கப்பட்டன.
இராணுவ சேவை அதிகாரசபையால் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின்போது 35 மில்லியன் ரூபாய் பெருமதியான எழுபத்து ஏழு புதிய முச்சக்கர வண்டிகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான 2.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 35 உயர் கல்வி உதவி தொகைகள்,
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கான 2 மில்லியனுக்கும் அதிகமான 102 பரிசில்கள், 1.44 மில்லியன் ரூபாய் பெறுமதியான 110 பிற கல்வி உதவி தொகைகள் 17 இராணுவ கிராம நூலகங்களுக்கு ரூபா 150,000.00, பெறுமதியான உதவிகள், ஒவ்வொன்றும் ரூபா 300,000.00 பெறுமதியான 13 வீடமைப்பு கடன்கள், ஒவ்வொன்றும் ரூபா 100,000.00 பெறுமதியான 06 வீட்டு அன்பளிப்புக்கள் மற்றும் ஒவ்வொன்றும் ரூபா 250,000.00 பெறுமதியான 5 மருத்துவ உதவிகள் என பல மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிகள் ஊனமுற்ற போர் வீரர்களுக்கும், அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, முப்படைத் தளபதிகள் மற்றும் இராணுவ சேவை அதிகாரசபையின் தலைவி திருமதி. பத்மா வாத்தாவ மற்றும் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


 

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►