blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, November 18, 2014

ஜனாதிபதியின் 69 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சர்வமதத்தலைவர்களும் வாழ்த்து!

நாட்டு மக்களினதும் நல்லபிமானத்தையும், மும்மணிகளின் நல்லாசியையும் பெற்று நல்லாட்சி செய்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை தனது 69வது வயதில் பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

ஜனாதிபதியாக இரண்டாவது சுற்றில் ஐந்தாவது ஆண்டிலும் அவர் பிரவேசிக்கிறார்.
நாட்டின் தலைவரான ஜனாதிபதிக்கு நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம், நீண்ட ஆயுள் மற்றும் சகல விதமான செல்வங்களுடனும் வெற்றியான ஆட்சிக்கு சர்வமத தலைவர்கள் தமது வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்துள்ளனர்.
வண. குபுருகமுவே வஜிர நாயக்க தேரரின் ஆசிச்செய்தி!
ஜனாதிபதி ஒரு பெளத்தராகவிருந்த போதும் இந்நாட்டின் அனைத்து இன மக்களையும் பாகுபாடு இன்றி நடத்துகிறார். ஏனைய மதங்களுக்கு வழங்க வேண்டிய கெளரவம், மதிப்பை நன்முறையில் பேணுகிறார். 
புத்த பெருமான் காட்டித் தந்த போதனையின் வழியில் வாழும் நமது ஜனாதிபதி அவர்கள், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென்று ஆசீர்வதிக்கின்றேன் என்று பேராசிரியர் வண. குபுருகமுவே வஜிர நாயக்க தேரர் தனது ஆசியில் தெரிவித்துள்ளார்.
இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மாயின் ஆசிச்செய்தி!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை தனது 68வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். ஜனாதிபதியாக இரண்டாவது சுற்றில் நான்காம் ஆண்டிலும் பிரவேசிக்கிறார்.இத்தருணத்தில் சர்வமத தலைவர்களென்ற ரீதியிலும் இந்து சமய விவகார இணைப்பாளர் என்ற ரீதியிலும் இலங்கை வாழ் இந்துக்களின் சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்துவதில் பெருமிதமடைகின்றேன்.
சகல செளபாக்கியங்களும் பெற்று நல்வாழ்வு காண வேண்டுமென்று ஆசீர்வதிப்பதோடு, எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளர் இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தனது ஆசியில் குறிப்பிட்டுள்ளார்.
கலாநிதி ஹசன் மெளலானாவின் ஆசிச்செய்தி!
நாட்டில் அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்பவர் நமது ஜனாதிபதி இன்று நாம் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடுவதற்கு அந்த யுக புருஷரே பிரதான காரணம். 
அந்த சுதந்திரத்தை நமக்கு உருவாக்கித் தந்த ஜனாதிபதி நீண்ட நாள் வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம் என்று ஜனாதிபதியின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் கலாநிதி ஹசன் மெளலானா தெரிவித்துள்ளார்.
நமக்கு உபகாரம் புரிந்தவர்களுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற நபிமொழியும் நபி வழியும் முஸ்லிம்கள் ஆகிய எமக்கு இஸ்லாம் கற்றுத் தந்த பாடம்.
அருட் தந்தை சரத் ஹெட்டியாராச்சியின் ஆசிச்செய்தி!
ஜனாதிபதி எல்லா மதங்களையும் கெளரவித்து நடத்துகின்றார். கிறிஸ்தவ மதத்துக்கு அவர் ஆற்றி வரும் பணிகள் அளப்பரியன. 
கிறிஸ்தவ ஆலயங்கள் புனரமைக்கப்படுகின்றன. வழிபாடுகள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன. பல்வேறு வேலைத் திட்டங்கள் முன் னெடுக்கப்படுகின்றன. 
தாய் நாட்டுக்கு விசுவாசமாகச் செயற்பட ஜனாதிபதியின் இன்றைய பிறந்த நாளில் இருந்து அனைவரும் உறுதி பூணுவொம். அவர் எடுக்கும் அனைத்து முயற்சிக ளும் வெற்றி பெற வேண்டுமென இயேசுவின் பொருட்டால் பிரார்த்திக்கின்றேன் என்று அருட் தந்தை சரத் ஹெட்டியாராச்சி தனது ஆசியில் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►