தன்னை பாடசாலை அதிபர் ஒருவர் தொலைபேசியூடாக மிரட்டினார் என்று வடமாகாண சபை உறுப்பினரும் கல்வி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமாகிய இ.இந்திரராஜா வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் இ.இந்திராஜா தெரிவிக்கையில், வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு என உலக உணவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட சத்துணவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
இப் பாடசாலையின் முன்னாள் அதிபரே மோசடிகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் குறித்த விடயம் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து நான் கல்வி அமைச்சின் கவனத்திற்கும் சில அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தேன்.
இவ்வாறு கொண்டு வரப்பட்மை தொடர்பிலேயே குறித்த அதிபர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து நான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் கல்வி அமைச்சருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.- என்றார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, November 16, 2014
தன்னை பாடசாலை அதிபர் மிரட்டினார் என்று வட மாகாண சபை உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 விமானிகள் இறந்தனர். தலைநகர் இஸ்லாமா...
-
ஆசிரியர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா தங்கப்பதக்...
-
"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெ...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
No comments:
Post a Comment
Leave A Reply