இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 81 கிலோகிராம் கேரளா கஞ்சாப் பொதிகளுடன் சந்தேகநபர்கள் இருவரை தாம் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்தனர் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மாதகல் துறைமுகப் பகுதியில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியாவிலிருந்து படகுமூலம் கடத்திவரப்பட்ட கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுசெல்லும் நோக்கில் சந்தேக நபர்கள் இருவரும் கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி கஞ்சாவை ஏற்றிக்கொண்டு புறப்படவிருந்த சமயமே பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நல்லூர் மற்றும் கல்வியங்காடு பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 35 வயதுடையவர்கள் என்றும், காரிலிருந்து 1 கோடியே 2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply