blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, November 26, 2014

அதிகாரத்தைக் கைப்பற்றியதும் ராஜபக்ஷக்களின் ஃபைல்கள் வெளியே எடுக்கப்படும் - சந்திரிக்கா குமாரதுங்க!

எதிரணி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் ராஜபக்ஷக்களின் பைல்கள் வெளியே எடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று செவ்வாய்க்கிழமை ஹொரகொல்ல பகுதியிலுள்ள பண்டாரநாயக்கவின் சமாதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டபின் மக்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை விட்டுச் செல்லும் நபர்களின் ஃபைல்கள் தன்னிடம் இருப்பதாகவும், ஆனால், அதனைக் கொண்டு பழிவாங்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் பற்றி கருத்து வெளியிட்ட சந்திரிக்கா குமாரதுங்க, “எங்களது ஆட்கள் அதிகாரத்துக்கு வந்ததும், ராஜபக்ஷக்களின் ஃபைல்களை இழுப்போம். இப்போதைக்கு அது போதும். இது குறித்து இனி கேள்வி கேட்க வேண்டாம்” என்றுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►