மன்னார் மடு பகுதியில் ஒன்றரை வயது மகனுக்கு விஷத்தை ஊட்டிய தந்தை ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.விஷமருந்திய இருவரும் பெரியபன்றிவிரிச்சான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கவலைக்கிடமான நிலையில் உள்ள தந்தை மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவரது மனைவியும் சில மாதங்களுக்கு முன்னர் விஷமருந்தி தற்கொலை செய்திருந்தமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் காரணமாக மன உளைச்சலுக்குள்ளானதால் குறித்த நபர் இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply