தலையில் பந்து பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ்(25) சிகிச்சை பலனின்றி
மருத்துவமனையில் உயிரிழந்தார்.
எதிர்பாராதவிதமாக தலையில் பந்து தாக்கியதில்
சுயநினைவினை இழந்த ஹியூக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆஸ்திரேலியாவில் முதல் தர கிரிக்கெட் போட்டியானது, நியூ சவுத் வேல்ஸ்
மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் விளையாடிய
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்த
போது, பவுன்சராக வந்த பந்து எதிர்பாராத விதமாக தலையில் பலமாக தாக்கியது.
இதனையடுத்து
அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு
எடுத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஹியூக்ஸின் நிலைகவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவசர அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது, இதுகுறித்த
தகவல்கள் 48 மணி நேரத்திற்குள் தெரியும் என்று மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர். 63 ரன்கள் எடுத்திருந்த போது, ஷேன் அபாட்டின் வீசிய
பந்தானது ஹெல்மெட் அணிந்திருந்த ஹியூக்ஸின் இடது தலையில் பட்டு
தாக்கியவுடனேயே ரத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது.
பதறிப்போன மற்ற
வீரர்களும், மருத்துவ உதவியாளர்களும் முதலுதவி அளித்து அவரை
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள்
மற்றும் சக போட்டியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப் ஹியூக்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும், 25 ஒரு நாள்
போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply