இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களை
விடுவித்தமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷவிற்கு இந்தியப்
பிரதமர் நரேந்திரமோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.நேபாளம்இ காத்மண்டு நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கும்இ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் நேற்று இடம்பெற்ற விசேட இருதரப்பு சந்திப்பின் போதே இந்தியப் பிரதமர் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.
நேபாளம் காத்மண்டுவில் நடைபெற்று வரும் சார்க் அமைப்பின் 18 ஆவது உச்சிமாநாட்டின் உப நிகழ்வாகவே இந்த இரண்டு தலைவர்களினதும் சந்திப்பு இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்குமிடையிலானசந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுவாக்குவது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கிடையிலான பொருளாதார வர்த்தக உறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இரணடு தலைவர்களும் ஆழமாக ஆராய்ந்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களை விடுவித்தமை தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடி தனது நன்றியை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் தேசியப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அடைவது குறித்து அணுகுமுறை தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது இரண்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
நேற்றைய தினம் இரண்டு நாடுகளின் தலைவர்களும் 18 ஆவது சார்க் உச்சிமாநாட்டில் தமது நாடுகளின் சார்பாக உரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply