யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.குறித்த இணையத்தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன நேற்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த இணையத்தளம் செயலிழந்து போயுள்ளமையானது பிரபாகரனின் பிறந்த நாளிற்கு வாழ்த்து தெரிவித்தமையால் அரசாங்கத்தினால் முடக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக யாழ். மாநகரசபையுடன் ஒன்லைன் உதயன் தொடர்பு கொண்டு கேட்டபோது :-
குறித்த இணையத்தளம் மாநகரசபையின் முன்னால் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா பதவியில் இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் சென்ற வருடம் இனந்தெரியாத நபர்கள் இணையத்தில் ஊடுருவி பிரபாகரனின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியினை பிரசுரித்திருந்தார்கள்.
அதனை அடுத்து குறித்த இணையத்தளத்தினை அப்போதைய முதல்வரின் உத்தரவுக்கு அமைய தடைசெய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் யார் இவ்வாறான செயலில் ஈடுபட்டார்கள் என்பது எமக்கு தெரியாது என மாநகரசபையின் பதிவாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply