சீரற்ற
வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்
நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இந்த நடவடிக்கையில் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பை பாராட்டிய ஜனாதிபதி, மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பு என சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துவது தொடர்பிலான அமைச்சரவை உப குழுவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
அலரி மாளிகையில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், சந்தையில் பொருட்களின் விலையை நியாயமாக பேணுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
2014 ஆம் ஆண்டு சிறுபோகத்தின் போது நெல் உற்பத்தி குறைவடைந்தமையால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரிசி தட்டுப்பாடு தொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்த ஜனாதிபதி், தேவையான அரிசியை களஞ்சியப்படுத்துமாறும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply