காணாமல்
போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்,
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட சாட்சி விசாரணை இன்று
ஆரம்பமானது.காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் இன்றைய அமர்வு நடைபெற்றது
ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக இன்றைய தினம் 59 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், 49 பேர் சமூகமளித்து சாட்சியமளித்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவிக்கின்றார்.
இதுதவிர இன்றைய தினம் புதிதாக மேலும் 16 பேரின் முறைபாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதான அவர் குறிப்பிட்டார்.
குருக்கள் மடத்தில் 163 பேர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இன்று அநேகமானோர் சாடசியமளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அமர்வுகள் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நாளையும் இடம்பெறவுள்ளன.
காணாமல்போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை ஏற்கனவே கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நடத்தப்பட்டிருந்தன
No comments:
Post a Comment
Leave A Reply