போலந்து நாட்டைச் சேர்ந்த 91 வயது பெண் ஒருவர் உடல்நலம் மோசமடைந்ததால் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், அந்த பெண் இறந்துவிட்டதாக அறிவித்தார்.
இதை அடுத்து அந்த மூதாட்டியின் உடலை மருத்துவமனையில் உள்ள பிண அறையில் பாதுகாப்பாக வைத்தனர்.
வெளியூரில் உள்ள உறவினர்கள் வந்த பின்னர் இறுதிச்சடங்கு செய்யவுள்ளதாகவும், அதுவரை பிணவறையில் உடலை வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில் ஒரு சிலமணி நேரம் கழித்து அதே பிண அறைக்கு இன்னொருவரின் இறந்த உடலை மருத்துவமனை ஊழியர் ஜானிகா என்பவர் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது, இறந்ததாக அறிவிக்கப்பட்ட மூதாட்டி திடீரென எழுந்து, “இங்கே ரொம்ப குளிராக இருக்கிறது. எனக்கு தேநீர் கொடுங்கள்” என்று ஜானிகாவை பார்த்து கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜானிகா அவரை பேய் என நினைத்து அங்கிருந்து ஓட்டம் பதறியடித்து ஓடினார். பின்னர் மருத்துவமனை டாக்டரிடம் அவர் இதுகுறித்து தெரிவித்தார்.
மூதாட்டியை இறந்ததாக அறிவித்த டாக்டர் வெயிஸ்லாவா கூறுகையில், “என்னால் இதை நம்பமுடியவில்லை. மூதாட்டியின் உடலில் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால்தான் அவரை இறந்ததாக அறிவித்தேன்.அவர் உயிர் பிழைத்த அதிசயம் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது” என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply