blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, November 20, 2014

யார் எதிர்த்து நின்றாலும் நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்போம்: ஏ.எல்.எம். அதாஉல்லா!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மூன்றாவது முறையாகவும் அதிகூடிய விருப்பு வாக்குகளால் வெற்றி பெறுவார் என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதஉல்லா தெரிவித்தார்.

 
மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வாழ்வின் எழுச்சி செழிப்பான இல்லம் திவி நெகும பயனாளிகளுக்கு வீடு திருத்துவதற்கான ரூபா 2 ஆயிரத்து 500 முதற்கட்ட கொடுப்பனவு மற்றும் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் சுமார் 50 இலட்சம் ஓதுக்கீட்டின் மூலம் அக்கரைப்பற்று பள்ளிக் குடியிருப்பு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவம் (18) பள்ளிக்குடியிருப்பு அல் பாயிஷா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
 
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆசியாவின் முதல் மனிதனாகத் திகழ்கின்றார். அவரது ஆட்சிக் காலத்தில் இலங்கை வரலாறு காணாத அபிவிருத்திகளைக் கண்டுள்ளதோடு, எங்களை நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வைத்துள்ளார். அவரை நாம் மறக்கக்கூடாது.
 
மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் எங்களது வாழக்கைத்தரம் உயர்வடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யார் எதிர்த்து நின்றாலும் நாம் அவருடனே இருப்போம். 
 
கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு தேசிய காங்கிரஸ் முன்னின்று உழைத்தது.
 
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சுக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் உள்ளுராட்சிப் பிரதிநிதிகளின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கில்களும் வழங்கப்பட்டுள்ளன.
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
 
இவ்வைபவத்தில் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. றாசிக், அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்எம். பஹ்ஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►