தமிழக
மீனவர்களின் மரண தண்டனையை இரத்துச் செய்து, அவர்களை விடுதலை செய்வதற்கு
ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், மத்திய, மாநில,
இலங்கை அரசாங்கத்திற்கும் குறித்த மீனவர்களின் உறவினர்கள் நன்றி
தெரிவித்துள்ளனர்.மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதன் மூலம் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வு சிறப்புறச் செய்தமைக்கு மீனவ பிரதிநிகள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், ராமேஸ்வரம் மீனவர்களின் விடுதலையை அவரது குடும்பத்தினர் கொண்டாடி வருவதாக இந்தியகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் கடத்தியமைக்காக மரண விதிக்கப்பட்டு, பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொது மன்னிப்பு வழங்கிய தமிழக மீனவர்கள் ஐவரும் இன்று மதியம் திருச்சி விமானத்தை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply