திகாமடுல்ல
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின்
முயற்சியினால் வீதி அபிவிருத்தி அமைச்சின் 6 இலட்சம் ரூபா நிதி
ஒதுக்கீட்டில் கல்முனை அலியார் வீதிக்கு காபெட் இடும் வேலையினை
அங்குரார்ப்பணம்
செய்து வைக்கும் நிகழ்வும் பொதுக்கூட்டமும் கல்முனை
அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் (19/11/2014) இடம்பெற்றது.
கல்முனை
மாநகர சபை உறுப்பினரும், அம்பாரை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்வின் தலைமையில்
இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,
கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி
எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதி அபிவிருத்தி
வேலையினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில்
வீதி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் ஏ.பீ.எம். அலியார், கல்முனை வீதி
அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எல்.எம். ஜாபீர், கல்முனை வீதி
அதிகார சபையின் பொறியியலாளர் ஏ.எம்.எம். ஸபீக், கல்முனை முகைதீன் ஜூம்ஆப்
பள்ளிவாசலின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், கல்முனை ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸின் மசூராக் குழுத் தலைவர் அல்-ஹாஜ் யூ.எல்.ஏ. கரீம்
உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Leave A Reply