நாவலப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை இழவுபடுத்தி,
முகப்புத்தகத்தில் (Facebook) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தியைப்
பார்த்த அவ்வதிபருக்கு உயர்குருதியமுக்க நோய் ஏற்பட்டு அவர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று (19)
இடம்பெற்றது.
இதேவேளை, குறித்த பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ள சிலர், அங்கிருந்த
ஆசிரியர் ஒருவரை கடுமையாகப் பேசி, அவர் மீது தாக்குதல் நடத்தியதில்,
அவ்வாசிரியையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விரு சம்பவங்கை அடுத்து, குறித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் மத்தியில் அமைதியற்ற நிலைமை உருவாகியுள்ளது. இவ்விரு
சம்பவங்களையும் கண்டித்து, அவர்கள் நேற்று நாவலப்பிட்டி நகரில்
ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும், நாவலப்பிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது.
-
7 வது முறையாக ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை துவங்கியது.
-
இங்கிலாந்தில் 15 வயது மாணவியுடன் 30 வயதான அவரது கணக்கு வாத்தியார் நாட்டை விட்டே ஓடி விட்டார்.
-
"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெ...
No comments:
Post a Comment
Leave A Reply