
ரொத்தஸ் பகுதியில் உள்ள பால் சேகரிக்கும் நிலையத்தில் பழுதடைந்த பாலை இவ்வாறு பௌசர் மூலமாக ஹட்டன் ஓயா ஆற்றிற்கு கொட்டுவதாக நீரை பாவிக்கும் இப்பகுதி மக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.
அடிக்கடி வெள்ளை நிறத்தில் வரும் இந்த நீரில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கும் மக்கள் இதனால் சூழல் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த நீரை செனன், வட்டவளை, கினிகத்தேனை, அம்பகமுவ, நாவலப்பிட்டி போன்ற பகுதி மக்கள் குடிதண்ணீராகவும் பயன்படுத்துகின்றமை குறிப்பிடதக்கது.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறித்த பிரதேச மக்கள் வேண்டுக்கோள் விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply