
எனவே கோதுமை மாவின் விலையை அந்த நிறுவனங்கள் குறைத்தால், நாமும் வெதுப்பக உணவுகளின் விலையைக் குறைக்கமுடியும். இவ்வாறு இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கப் பேச்சாளர் என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவித்தவை வருமாறு, இலங்கையிலுள்ள வெதுப்பகங்களுக்கு கோதுமை மா விநியோகம் செய்யும் நிறுவனங்கள், கோதுமை மாவின் விலை குறைத்தால், வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யப்படும் திண்பண்டங்களின் விலையை குறைக்கமுடியும்.
'எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களில் குறைவு ஏற்பட்டிருப்பதனால், கோதுமை மா விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.
அதனால் அந்த நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை குறைத்தால் எமது உற்பத்தி பண்டங்களின் விலையையும் குறைக்க முடியும்'.
அத்துடன் வெதுப்பக உற்பத்தி பண்டங்களின் மீதான 15 வீத வரி, பாண் மீதான 2 வீத வரி என்பவற்றையும் அரசாங்கம் குறைக்க வேண்டும். - என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply