ஊவா மாகாண சபைத்தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை இடம் பெறவுள்ளன.
இதன்போது 234 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.
வாக்களிப்பிற்காக 9 லட்சத்து 42 ஆயிரத்து 730 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
பதுளை
மாவட்டத்தில் 18 உறுப்பினர்களையும் மொனராகலை மாவட்டத்தில் 14
உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில் 617 வேட்பாளர்கள்
களம் இறங்கியுள்ளனர்.
இதனிடையே, மொனராகலை மாவட்ட வாக்களிப்பும் தயார் நிலையில் உள்ளதாக அரசாங்க அதிபர் பத்திநாதன் தெரிவித்துள்ளார்
இதனிடையே,
வாக்காளர்கள் காலை வேளையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று
வாக்குகளை அளிக்குமாறு தேர்தல்கள் செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்மூலம் வீண் சிரமங்களை தவிர்த்துக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே,
தேர்தல் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
வழங்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்புக்கள் மாலை 4 மணி வரையில் இடம்பெறவுள்ளது.
இதனை
தொடர்ந்து வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாக உள்ள நிலையில், முதலாவது தேர்தல்
பெறுபேறுகள் இன்றிரவு இரவு 10 மணி தொடக்கம் 11 மணிக்கிடையில் வெளியாகும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, September 20, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சாளர்களின் சவாலை எதிர்கொள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாக இலங்கை அணியின் ஆலோ...
-
இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கங்கை நதியை தூய்மைப்படுத்ததும் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த தொடங்கியுள்ளது.
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
No comments:
Post a Comment
Leave A Reply