எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, September 20, 2014
பஸ் நிலையத்தை சுத்தம் செய்து வாழ்க்கை நடத்தும் நியூஸிலாந்து சகலதுறை வீரர் கிறிஸ் கெயின்ஸ்!
நியூசிலாந்து அணியுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் மற்ற நாட்டு அணிகள் அந்த அணியை கண்டு பயப்படுகின்றனவோ இல்லையோ அந்த அணியின் சகலதுறை வீரர் கிரிஸ் கெயர்ன்ஸுக்கு நிச்சயம் பயப்படும்.
அவரது பேட்டிங் சரியான நேரத்தில் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கும்.
அசைக்க முடியாத அதிரடி வீரராக அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பும் திறன் எப்போதுமே கெய்ர்ன்ஸுக்கு உண்டு.
1970ஆல் நியூசிலாந்தின் மார்ல்ப்ரோவில் பிறந்த கிறிஸ் கெயின்ஸ். இளம் வயதிலிருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமுடையவர்.
அவர் அணிக்கு விளையாடவந்த வருடம் 1989 இதிலிருந்து அவர் ஓய்வு பெற்ற 2004ஆம் வருடம் வரை அணியில் நட்சத்திர வீரராகவே வலம் வந்தார் கிறிஸ் கெயின்ஸ்.
உலகத்தின் சிறந்த சகலதுறை வீரர் என வர்ணிக்கப்பட்ட கிறிஸ் கெயின்ஸூக்கு ஐ.சி.சி விஸ்டன் விருது வழங்கி கெளரவித்தது.
இவ்வளவு பெருமை மிக்க கிறிஸ் கெயின்ஸின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? சொன்னால் நம்ப முடியாது, அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு உள்ள செய்தி தான் அது.
கிறிஸ் கெயின்ஸ் தற்போது ஒரு பஸ் நிலையத்தை சுத்தம் செய்யும் வேலையையும், மணிக்கு 17 டொலர் என்ற விகிதத்தில் ட்ரக் டிரைவராகவும் வேலை செய்து வருகிறார் என்பது தான்! அதுமட்டுமின்றி 44 வயதான இவரை தற்போது இங்கிலாந்து அதிகாரிகள் மேட்ச் பிக்சிங் குறித்து விசாரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள சக வீரரான டியோன் நாஷ் ”அவரது நிலை எனக்கு வருந்ததக்கதாக உள்ளது, இந்த நிலையில் இருக்கும் அவரை பார்க்கவே சங்கடமாக உள்ளது. அவருக்கு எங்களால் முடிந்த உதவியை செய்வோம். அவர் ஒரு சாம்பியன், அவர் இதிலிருந்து விரைவில் மீண்டுவருவார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த கிறிஸ் கெயின்ஸின் மனைவி மெல் க்ராஸர் ”அவருக்கு வேறு வழியில்லை அவர் இதனை சந்தித்து தான் ஆக வேண்டும், நாங்கள் இப்போது சொந்த வீட்டில் கூட இல்லை வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 3000ஓட்டங்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய கிறிஸ் கெயின்ஸ் உலகின் சிறந்த சகலதுறை வீரராக ஓய்வு வரை கருதப்பட்டார்.
வண்டி ஓட்டி வாழ்க்கையை நடத்தும் இந்த சகலதுறை வீரரின் வாழ்க்கையில் சோகத்திலிருந்து மீண்டு வர அவரது ரசிகர்கள் பிரார்த்திக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் இந்த குழுவானது சமய விவகார அமைச்சின் கீழ் செயற்...
-
அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருது மக்களினதும், மருதமுனை மக்களினதும் நன்றி உணர்வை மையமாக வை...
-
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துவருவதாக நம...
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply