ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நெருக்கடியான வெற்றியைப் பெற்று தனித்து ஆட்சி ஆட்சியமைக்கிறது. ஊவா மாகாண சபைக்கான தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதன் முடிவுகள் முழுமையாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பதுளை மாவட்டத்தில் 9 ஆசனங்களும், மொனறாகல மாவட்டத்தில் 8 ஆசனங்களுமாக 17 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
அத்துடன் 2 'போனஸ்' ஆசனங்களுடன் மொத்தமாக 19 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பதுளை மாவட்டத்தில் கடும் நெருக்கடியைக் கொடுத்து 8 ஆசனங்களையும், மொனறாகல மாவட்டத்தில் 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
இதேபோன்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இரு மாவட்டங்களிலும் தலா ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்....
No comments:
Post a Comment
Leave A Reply