2009ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலுடன் ஒப்பிடுமிடத்து இம்முறை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 69 ஆயிரம் வாக்குகள் குறைவாகக் கிடைத்துள்ளன. இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்கு 1 இலட்சத்து 45 ஆயிரத்து 629 வாக்குகள் அதிகமாகக் கிடைத்துள்ளன.
மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த 2009ஆம் ஆண்டை விட 21 ஆயிரத்து 941 வாக்குகளை அதிகமாகப் பெற்றுள்ளது.
இம்முறையும் ஊவா மாகாண சபையை ஐ.ம.சு.மு கைப்பற்றியுள்ள போதிலும், 6 ஆசனங்களை இழந்துள்ளது.
இதேவேளை, ஐ.தே.க.வுக்கு 6 ஆசனங்கள் மேலதிகமாகக் கிடைத்துள்ளன.
மக்கள் விடுதலை முன்னணியும் ஓர் ஆசனத்தை மேலதிகமாகப் பெற்றுள்ள அதேவேளை, கடந்த முறை ஓர் ஆசனத்தைப் பெற்றிருந்த மலையக மக்கள் முன்னணி, இம்முறை அந்த ஆசனத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply