மனித
உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு, சில தரப்பினர் நாட்டிற்கு தேவையற்ற
அழுத்தங்களை பிரயோகிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் 69 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் உரையாற்றும்போது, ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டார்.
பொதுச் சபைக் கூட்டத்தில் இன்று அதிகாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உரையாற்றியிருந்தார்.
யுத்தத்திற்கு பின்னர், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை புரிந்துகொள்ளாது அவர்கள் தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செயற்பாடு நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்புச் பேரவையின் கட்டமைப்பு சர்வதேச நாடுகளுக்கு பொருந்தும் வகையில், மாற்றியமைக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
சர்வதேசத்தின் பாதுகாப்பிற்கும், ஸ்திர தன்மைக்கும் பயங்கரவாதம் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமூகம் பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படுவதற்கான தேவை காணப்படுவதாகவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று பயங்கரவாதத்திற்கு நிதி சேகரித்தல் உட்பட சர்வதேச ரீதியில் இடம்பெறும் திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு
இலங்கை முழுமையான ஆதரவு வழங்கும் எனவும் ஐநாவின் 69 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் உரையாற்றும்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply