செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்துவதற்காக
இந்தியா அனுப்பி உள்ள மங்கயான் விண்கலம், செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில்
தனது பயணத்தை வெற்றிகரமாக துவங்கி உள்ளது.செவ்வாயில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம், 2 நாட்களுக்கு முன் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடைந்தது.
இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பிரதமர் நரேந்திர மோடியும், கர்நாடக முதல்வரும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேரில் பார்வையிட்டனர்.
விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு
முதல் முயற்சியிலேயே மங்கயான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி வாழ்த்து
மங்கள்யான் சாதனைக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மங்கள்யான் செவ்வாய் கிரக சுற்று பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, இந்தியாவின் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில் நாசா வெளியிட்டுள்ள செய்தியில், செவ்வாய் கிரகத்திற்கு வருகை தந்துள்ள இஸ்ரோவை நாங்கள் வரவேற்று வாழ்த்துகிறோம்.
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளில் இந்தியாவின் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷனும் இணைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply