
அமெரிக்காவின் கெண்டக்கி மாநிலத்தை சேர்ந்த பினாகா (Binaca age - 32) என்ற ஆண் மகன் திருநங்கையாக மாறியுள்ளார், நிக் (Nick age -27) என்ற பெயருடன் பெண்ணாக பிறந்தவர் ஆணாக மாறியுள்ளார், இவர்கள் இருவரும் 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
இதில், பெண்ணாக பிறந்து, தன்னை ஆண் போன்று மாற்றிக்கொண்ட நிக், குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும், தற்போது தங்களுடைய நிஜவாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
அதாவது, பிறப்பில் எந்த இனத்தை தழுவி பிறந்தனரோ, அதே நிலைக்கே மாறியுள்ளனர், மேலும் இவர்களின் கடந்த கால வாழ்க்கை குறித்து தங்களது குழந்தைகளிடமும் தெரிவிக்கப்போவதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து இவர்கள் கூறுகையில், எங்களுடைய பழைய புகைப்படங்களை பார்த்து, குழந்தைகள் கேள்வி கேட்பதால் நாங்கள் உண்மை நிலையை அவர்களிடம் கூற விரும்புகிறோம் என கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment
Leave A Reply