
கனடாவின் வன்கூவரைச் சுயாதீன வடிவமைப்பாளரான ஆண்ரிவ் சோ (Andrew Zo - age 26) என்பவரே இந்த வடிவமைப்பாளராவார்.
3-வருடங்களிற்கு முன்னர் Emily Carr University of Art பல்கலைக் கழகத்தில் தனது மாணவ பணிக்கான வேலை செய்து கொண்டிருக்கையில் அது சம்பந்தமாக ஒரு ஆபரண வடிவமைப்பாளருடன் தொடர்பு கொண்ட போது, அவர் மோதிர பெட்டி விபர பட்டியலை காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இவரது காதலியுடன் இடம்பெற இருந்த நிச்சயதார்த்தத்திற்கு இந்த பெட்டியை செய்ய வேண்டும் என்ற இந்த யோசனை வலுவடைய பெட்டியை வடிவமைக்க திட்டமிட்டுள்ளார்.

இப்பெட்டி தோலுறையினால் சுற்றப்பட்டுள்ளது. 1-சென்ரி மீற்றர் தடிப்பானதுடன் பொப்-அப் பொறிமுறையை கொண்டுள்ளதால் மோதிரத்தை மறைத்து வைக்க கூடியது.
நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் இதனை வணிகப்படுத்த தீர்மானித்ததாக கூறியுள்ளார். இவருக்கு பல ஓடர்கள் வர ஆரம்பித்துள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply