
பிரான்ஸின் தென்பகுதி நகரான ரோன் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது காதலிக்கு அளவுக்கு அதிகமான தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு தொல்லை கொடுத்தால், காதலியினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
குறித்த காதல் ஜோடி, கடந்த 2011ஆம் ஆண்டில் பிரித்து விட்டது.
காதலியினால் ஏமாற்றப்பட்ட இளைஞர் மனஉளைச்சலுக்கு ஆளான நிலையில், சில காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்றான்.
காதலர்கள் இருவரும் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் இந்த இளைஞன் ஒரு குடியிருப்பு வீடு ஒன்றினை வாங்கி அதில் பல செலவுகளையும் மேற்கொண்டிருந்தான். இதற்கு செலவு செய்த தொகையை அவள் தனக்குத் திருப்பித் தரவேண்டும் அல்லது தனக்கு நன்றியாவது சொல்ல வேண்டும் என்று அந்த இளைஞன் எண்ணினான்.
இதனைத் தொடர்ந்து கடந்த பத்து மாதங்களாக அவளுக்கு தினமும் தொலைபேசி தொடர்பு கொண்டும், எஸ்எம்எஸ் செய்திகளை அனுப்பியும் தொந்தரவு கொடுத்து வந்தான்.
தினசரி குறைந்தது 73 முறையாவது அவளை தொடர்பு கொண்டவிதத்தில் கடந்த பத்து மாதங்களில் மட்டும் 21,807 முறை அவளைத் தொடர்பு கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவனது தொல்லை தாங்கமுடியாமல் அந்தப் பெண் தனது போனின் தொடர்பை துண்டித்தபோதும் அவளது பணியிடத்திற்கும், பெற்றோருக்கும் அவன் போன் செய்யத் தொடங்கினான்.
அந்தப் பெண் கொடுத்த புகாரின்பேரில் இவனைக் கைது செய்த காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தியதில் இந்த இளைஞனுக்கு பத்து மாத சிறைத்தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது.
அதன்பின்னர் இந்தத் தண்டனைக் காலத்தில் ஆறு மாதங்கள் குறைக்கப்பட்டு 1000 யூரோ அபராதம் விதிக்கப்பட்ட அந்த இளைஞன் நேற்று சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டான்.
அத்துடன் அவன் மனநல சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும் என்றும் அந்த பெண்ணைத் தொடர்பு கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply