யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (25) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த யுவதியின் வழக்கு விசாரணை தொடர்பாக கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குருநகர் பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் இருந்து புத்தாண்டு தினம் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவ் விசாரணைகளின் போது குறித்த யுவதியின் பெற்றோர்கள் இரு பாதிரிமார்களே தமது மகளின் தற்கொலைக்கு காரணம் என கூறினார்கள்.
அதன் அடிப்படையில் இரு பாதிரிமார்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்யப்பட்டது.
அதில் இரு பாதிரிமார்களும் தமக்கும் குறித்த யுவதிக்கும் இடையில் கல்வி கற்பித்தல் தொடர்பான தொடர்புகளே இருந்ததாகவும் வேறு எந்த தொடர்பும் இல்லை எனவும் தமது வாக்கு மூலத்தில் தெரிவித்தனர்.
அத்துடன் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையிலும் குறித்த பெண் நீரில் மூழ்கியதனாலே உயிரிழந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே பொலிசார் பெற்றோர்களின் வாக்கு மூலத்தை மட்டும் வைத்து பாதிரிமார்களை கைது செய்ய முடியாது. பாதிரிமார்களை கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாதமையால் தான் அவர்களை கைது செய்து கடந்த நீதிமன்ற தவணையில் முற்படுத்த வில்லை.
ஆனால் அடுத்த தவணையின் போது (எதிர்வரும் 12ம் திகதி) குறித்த இரு பாதிரிமார்களும் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.
அதேவேளை கடந்த 23ம் திகதி நீதிமன்றில் நடந்த யுவதியின் வழக்கு விசாரணையின் போது யுவதி பாவித்த தொலைபேசியை பொலிசாரிடம் ஒப்படைக்கும்மாறு யுவதியின் பெற்றோர்களிடம் உத்தரவு இடப்பட்டு இருந்தது அது தொடர்பாக கேட்ட போது,
யுவதியின் தொலைபேசி தொடர்புகள் குறித்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு இடப்பட்டுள்ளது. அது தொடர்பான கடிதம் இன்றைய தினமே நீதிமன்றத்தால் பொலிசாருக்கு கிடைக்க பெறும்.
அக் கடிதம் கிடைத்த பின்னரே யுவதி பாவித்த தொலைத்தொடர்பு இலக்கம் தொடர்பான தொடர்புகள் குறித்து குறித்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஊடக அறிக்கை பெற முடியும்.
அதேவேளை, இரு பாதிரிமார்களின் தொலைத்தொடர்பு தொடர்புகள் குறித்து ஆராயப்படும் எனவும் யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியச்சகர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply