
பாகிஸ்தானிய கிரிக்கெட் சபை இந்த விசாரணையை நடத்தியுள்ளது. எனினும் தாம் தனிப்பட்ட ரீதியில் இந்த கருத்தை டில்ஷானிடம் கூறியதாக செஹாட் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் டில்ஷானை பாதித்திருக்குமானால் ஏன் அவர் உத்தியோகபூர்வமாக முறையிடவில்லை என்றும் செஹாட் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதியன்று இலங்கை அணிக்கும் பாகிஸ்தானிய
அணிக்கும் இடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி
இடம்பெற்றது.
இதன்போது இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில் டில்ஷான் 50 ஓட்டங்களை
பெற்றார்.
இதனையடுத்து வீரர்கள் ஓய்வு அறைக்கு திரும்பும் போது செஹாட்
டில்ஷானுடன் பேசிய விடயங்கள் ஒலிப்பதிவாகியுள்ளன.
அதில் “ நீங்கள் முஸ்லிமாக இருக்காவிட்டால், முஸ்லிமாக மாறுங்கள்.
நீங்கள் வாழ்க்கையில் எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள்
நேரடியாக சுவர்க்கத்துக்கு போகலாம்” என்று செஹாட் இதன்போது கூறியுள்ளார்.
எனினும் இதற்கு டில்ஷான் பதிலளிக்க முயன்ற போது செஹாட் அதனை கேட்காமலேயே சென்றுவிட்டார். அத்துடன் டில்ஷானின் குரலும் பதிவாகவில்லை.
இந்தநிலையில் செஹாட் நேற்று லாகூரில் உள்ள பாகிஸ்தானிய கிரிக்கெட் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.
37 வயதான டில்ஷான் முஸ்லிம் தந்தைக்கும் பௌத்த தாய்க்கும் பிறந்தவர். ஆவர் துவான் மொஹமட் டில்ஷான் என்ற அழைக்கப்பட்டார்.
1999 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்தபின்னர் அவர் தமது பெயரை
திலகரட்ன முதியான்ஸலாகே டில்ஷான் என்ற பௌத்த பெயராக மாற்றிக்கொண்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply