டிசம்பர் 26ஆம் நாள் (26/12/2004) இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பலிகொண்ட இந்த ஆழிப்பேரலை இருபது இலட்சத்துக்கும் அதிகமானோரை உடமைகள் இழந்து நடுத்தெருவுக்கு கொண்டுவிட்டது.
பெற்றோர் இன்றி பிள்ளைகளும், பிள்ளைகள் இன்றி பெற்றோர்களுமாக மீதி உயிர் இருந்தும் மயானங்களாகத்தான் நாடு கிடந்தது எனறால் மிகையாகாது.
இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் ஆரம்பமான கோர அலை தென் கிழக்கு ஆசியா நாடுகள், இந்தியா என பல கடலோர நாடுகளை புரட்டிப்போட்டதை யாரால் மறக்க முடியும்..!
இறப்பு இயற்க்கை என்பதை இயற்க்கை அனர்த்தம் காட்டிப் போனதுவோ!! என புலம்பல்களாலும் கண்ணீராலும் நாடுகள் பலவற்றை நிறைய வைத்த நிகழ்வினை நம்மால் தடுக்க முடியாதுதான்..
நம்மை விட்டு நீங்கிய உறவுகளின் நினைவுகளை சுமந்துகொண்டு அவர்களுக்காக என்றென்றும் பிரார்த்தனை செய்வோம்....
மீண்டும் ஒரு துயர் கோர சம்பவம் நிகழாது இருக்க இறைவனை இன்றும் என்றும் பிரார்த்திப்போம்.
நாடெங்கிலும் இன்னும் துயரோடும், உதவிகள் இன்றியும் வாழும் சகோதர சகோதரிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை என்றும் செய்ய கடமைப்பட்டவர்கள் நாம் என்பதை முன்கூட்டியே நியாபகப்படுத்திக்கொள்வோம்..
எம். ஆர். ஏ. நிஷா
East News First.
No comments:
Post a Comment
Leave A Reply