
ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாகவும், அப் பேச்சைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அதி உயர்பீடக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட் டுள்ளது என்றும் மு.காவின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி எம்.பி. தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்ட விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு சிறுபான்மை மக்கள் கௌரவமானதொரு அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றனர். எனினும், இது விடயத்தில் தொடர்ந்தும் காலம் கடத் தப்படுகின்றது.
எனவே, அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு அரசு முன்வரவேண்டும். கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு முன் னர் தீர்வுத்திட்ட நகலை அது முன் வைக்க வேண்டும்.
இதை விடுத்து தெரிவுக்குழுவைக் காரணம்காட்டி காலம் கடத்துவது நியாயமற்ற செயலாகும்.
அத்துடன் தெரிவுக் குழுவுக்குள் மு.காவை அரசு உள் வாங்காமையானது எமக்கு நெற்றியடியாகும். ஆகவே, தீர்வுத்திட்ட நகலை முன்வைத்தால்தான் அதன் சாதக பாதகத் தன்மையை ஆராய்ந்து இணக்கப்பாட்டுக்கு வரக்கூடியதாக இருக்கும்.
குறிப்பாக பெரும்பான்மை அரசுகளுக்கு சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் தெரியாமல் இல்லை. கடந்த காலங்களில் பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவை முன்வைத்த அறிக்கைகளில் பிரச்சினைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே, அரசு இதயசுத்தியுடன் பேசுவதற்கு முன்வந்தால் மாத்திரமே பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை எட்டமுடியும்.
அதேவேளை, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாம் பேச்சு நடத்தினோம்.
அதற்காக இரு தரப்புகளிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் மேற்படி பேச்சு விரைவில் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் ஹசனலி எம்.பி. கூறினார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply