blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, September 27, 2014

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று!!

18 ஆண்டுகள்; 6 நீதிமன்றங்கள்; 90 நீதிபதிகள்! ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று!!ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, இந்த வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று சனிக்கிழமை தீர்ப்பு வழங்குகிறது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நேரில் முன்னிலையாக இருப்பதால் பெங்களூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி, கடந்த 24ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் என்.ராஜாராமன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் ஜெயலலிதாவுக்கு "பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கின் தீர்ப்பை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என கோரப்பட்டிருந்தது. ஆனால், மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான பெஞ்ச், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்திருந்தால் முதல்வர் ஜெயலலிதாவே மனு தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.

மேலும், "பாதுகாப்பைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அரசு அதை பார்த்துக்கொள்ளும். இந்த வழக்கில் மனுச் செய்து வாதாட நீங்கள் யார்?" என்று உச்சநீதிமன்ற பெஞ்ச், மனுதாரர்களை கடுமையாக விமர்சித்தது.

எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு இந்நிலையில் இன்று சனிக்கிழமை பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறை வளாக நீதிமன்றம் அல்லது 37ஆவது பெருநகர சிவில் நீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதையொட்டி தமிழக - கர்நாடக எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கிற்காக பரப்பன அக்ரஹாரம் நீதிமன்றத்திற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வரவுள்ளதால் தமிழக - கர்நாடக எல்லை மற்றும் பரப்பன அக்ரஹாரம் நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் 6000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீர்ப்பு வழங்கப்படும் நாளில் தமிழகத்திலிருந்து ஏராளமான அ.தி.மு.க தொண்டர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பெங்களூரு காவல்துறை ஆணையர் எம்.என் ரெட்டி தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகள் வரை சிறை இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக 6 நீதிமன்றங்களில் நடத்தப்பட்டது.

இதுவரை இந்த வழக்கினுள் 90 நீதிபதிகள் உள்ளே வருவதும் விலகுவதுமாக இருந்துள்ளனர். ஆனால் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்க இருக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா, இந்த வழக்கிகைப் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் தீர்ப்பெழுதும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

நேர்மைக்குப் பெயர் பெற்ற இவர் கடந்த நான்கு நாள்களாக தனது கைப்பட தீர்ப்பை திருத்தி, தட்டச்சு செய்துள்ளார்.

தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு 5 முதல் 8 ஆண்டுகள் வரை சிறை உறுதி என சட்ட நோக்கர்கள் கூறிவருகிறார்கள்.

எப்படியாயினும் தீர்ப்பின் உண்மை நிலவரம் இன்று மதியம் 12 மணிக்குள் தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►