தெனியாய பகுதியில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற மூன்று பாடசாலை மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஏனைய இருவரும் காயங்களுடன் தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதுடன், மற்றைய மாணவர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
தெனியாயவில் பெய்து வரும் அடை மழையின் காரணமாக கிளை ஆறுகள் பெருக்கெடுத்துள்ள நிலையில் நேற்று பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெனியாய ராஜபக்ஸ மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற 12 வயதுடைய மாணவர் ஒருவரே இந்த அனர்தத்தை எதிர்நோக்கியுள்ளார்.
பிரதேச மக்களின் ஒத்தழைப்புடன் மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு அவர்களில் ஒருவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போது உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply