புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு தீர்மானித்துள்ளது.துல்ஹிஜ்ஜா மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது.
இதன்போது துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால் துல்கஹ்தா மாதத்தை 30 நாட்களாக பூர்த்திசெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துல்ஹிஜ்ஜா மாதத்தை இன்று மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் ஆரம்பிக்க பிறைக்குழு தீர்மானித்துள்ளதாக பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி எம்.எஸ்.எம். தஸ்லிம் குறிப்பிடுகின்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply