திருகோணமலை
உப்புவெளி – அன்புவெளிபுரம் பகுதியில் சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்ற
குற்றச்சாட்டில் கைதானவர், எதிர்வரும் 06 ஆம் திகதிவரை விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் திருகோணமலை நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் 15 வயதான சிறுமியொருவரை நேற்று முன்தினம் அழைத்துச்சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply