நரேந்திர
மோடி பிரதமராவதற்கு முன்பிருந்தே பல ஆண்டுகளாக நவராத்திரி விரதத்தினை
கடைப்பிடித்து வருகிறார்.இந்த காலப்பகுதியில் பழங்கள் சாப்பிடுவதையும், எலுமிச்சம் பழச்சாறு அருந்துவதையும் மட்டுமே வழக்கமாக கொண்டிருப்பார்.
இந்த ஆண்டு நவராத்திரி விரதம் நாளை மறுதினம் தொடங்கி அடுத்த மாதம் 3ஆம் திகதி முடிவடைகிறது.
இந்த காலப்பகுதியில் தான் மோடியின் அமெரிக்க பயணமும் அமைந்துள்ளது.
தனது அமெரிக்க விஜயத்தின் போது எதிர்வரும் 29ஆம் திகதி, ஒபாமா வழங்கவுள்ள விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளார் மோடி.
இதனால் பிரதமர் மோடி தனது நவராத்திரி விரதத்தை கைவிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து இந்திய பிரதமர் அலுவலக வட்டாரங்கள் குறிப்பிடுகையில், பிரதமரின் அமெரிக்க விஜயத்தின் போது, நிகழ்ச்சி நிரல்கள் எதிலும் அவருடைய நவராத்திரி விரதம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply