சிரியாவுடனான தமது சில எல்லைகளை துருக்கி மூடியுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிரியாவில் இருந்து துருக்கியினூள் பிரவேசித்த குர்திஷ் மக்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட குர்திஷ் பிரிவினருக்கும் துருக்கிப் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நகர்வு மூலம் ஐ எஸ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கென சிரியாவிற்குள் குர்திஷ் படையினர் பிரவேசிக்க முடியாத நிலை ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ எஸ் கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக சிரியாவின் கொபேனா நகரில் இருந்து துருக்கிக்குள் பிரவேசிக்கும் குர்திஷ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply