blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, September 11, 2014

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைதடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண கடற்றொழில் அமைச்சர் பா. டெனிஷ்வரன் தெரிவிக்கின்றார்.


வட மாகாண மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான ஆலாசனைக் குழு கூட்டத்தின் முதலாவது அமர்வில்  நேற்று  உரையாற்றியபோதே மாகாண அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

குறிப்பாக வட மாகாணத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களது வாழ்வாதார அபிவிருத்திக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனை குழு கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

வடமாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர், மாகாணத்திலுள்ள அனைத்து கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►